/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாய்கள் கடித்து 20 செம்மறி ஆடுகள் பலி
/
நாய்கள் கடித்து 20 செம்மறி ஆடுகள் பலி
ADDED : மார் 05, 2024 11:34 PM

மதுராந்தகம்:வேடந்தாங்கல் அருகே உள்ள நெல்லி கிராமத்தைச் சேர்ந்த ராஜி, 55 என்பவர் 20 ஆடுகளும், எத்திராஜ், 45 என்பவர் 30 செம்மறி ஆடுகளும் வளர்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை மேய்ச்சல் முடிந்து, இரவு வழக்கம் போல் ஆடுகளை கொட்டகையில் அடைத்து வைத்து உள்ளனர்.
நேற்று, ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதற்காக வந்த போது, 20 ஆடுகள் இறந்து கிடந்தன. 10க்கும் மேற்பட்ட ஆடுகள், கடிபட்ட காயத்துடன் நடக்க முடியாமல் உள்ளன.
நெல்வாய் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். இறந்த ஆடுகளை பரிசோதித்தனர்.
விசாரணையில் இரவு நேரத்தில் கொட்டகைக்குள் புகுந்த தெருநாய்கள், ஆடுகளை கழுத்து மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கடித்துக் குதறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

