/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
துணை மேயர் வார்டில் 24 'சிசிடிவி' அமைப்பு
/
துணை மேயர் வார்டில் 24 'சிசிடிவி' அமைப்பு
ADDED : ஜன 16, 2025 01:17 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில், துணை மேயராக இருப்பவர் குமரகுருநாதன். இவர், தனது தேர்தல் அறிக்கையில், இப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என, தெரிவித்து இருந்தார்.
அதன்படி, தனது சொந்த செலவில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், தனது வார்டுக்கு உட்பட்ட முக்கிய சாலை சந்திப்புகளில், எட்டு இடங்களில், 24 அதிநவீன கேமராக்களை பொருத்தி உள்ளார்.
இக்கேமராக்களில் பதிவாகும் காட்சிகள், ஒரு மாதம் வரை சேமித்து வைக்க முடியும் என, துணை மேயர் குமரகுருநாதன் தெரிவித்தார்.
இதேபோல, மாநகராட்சிக்கு உட்பட்ட பிற வார்டுகளிலும், சிசிடிவி கேமரா பொருத்த மாநகராட்சி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

