/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
30 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு: எஸ்.பி., துவக்கிவைப்பு
/
30 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு: எஸ்.பி., துவக்கிவைப்பு
30 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு: எஸ்.பி., துவக்கிவைப்பு
30 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு: எஸ்.பி., துவக்கிவைப்பு
ADDED : ஜூலை 28, 2025 11:56 PM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில், கவுன்சிலர்கள் சொந்த செலவில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகின்றனர்.
அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சியில், 32வது வார்டு கவுன்சிலர் சாந்தி, தன் செலவில், வார்டில் உள்ள 10 தெருக்களிலும், 15 சந்திப்புகள் என, வார்டின் அனைத்து இடங்களையும் கண்காணிக்கும் வகையில், 30 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளார்.
ஆங்காங்கே பொருத்தப்பட்ட கேமராக்களின் பயன்பாட்டை, எஸ்.பி., சண்முகம் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். அனைத்து வார்டுகளிலும், கண்காணிப்பு கேமராக்களை கவுன்சிலர்கள் பொருத்த வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.