/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளுக்கு 4 நாட்கள் கேரளாவில் பட்டறிவு பயிற்சி

ADDED : ஜூன் 01, 2025 12:11 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒன்றியக்குழு தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பலர் பணிபுரிந்து வருகின்றனர்.
புதுப்பிக்கப்பட்ட ராஷ்டிரிய கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு, நான்கு நாள் பட்டறிவு பயிற்சி, கேரளாவில், நாளை முதல் அளிக்கப்பட உள்ளது.
நடப்பாண்டிற்குரிய பட்டறிவு பயிற்சிக்கு, வாலாஜாபாத் ஒன்றியக் குழு சேர்மன், 11வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், வாலாஜாபாத் ஒன்றியக் குழு 2வது வார்டு கவுன்சிலர், தேவரியம்பாக்கம், விசூர் ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி, பணி மேற்பார்வையாளர் ஆகிய ஐந்து நபர்கள் என, 10 நபர்களுக்கு கேரளா உள்ளாட்சி பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.