ADDED : நவ 11, 2025 10:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ரயிலில் கடத்தி வந்த 7 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் இருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில், எழும்பூருக்கு நேற்று முன்தினம் வந்தது.
அதில் வந்த மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குடியைச் சேர்ந்த பினாய் சேத்ரி, 32, என்பவரின் சூட்கேசில் 3.5 லட்சம் ரூபாய் மதிப்புடைய 7 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
ரயில்வே போலீசார் அவரை பிடித்து, போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

