/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரத்தில் 76வது ஆண்டு குடியரசு தின விழா கோலாகலம் ரூ.76.76 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

ADDED : ஜன 27, 2025 01:53 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மைதானத்தில், 76வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, காலை 8:00 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, காவல், வருவாய், மருத்துவம் உள்ளிட்ட பல துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், எட்டு பேருக்கு பெட்ரோலில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள்.
முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தைச் சேர்ந்த மூவருக்கு கல்வி உதவித்தொகை என, 29 பேருக்கு, 76.76 லட்சம் ரூபாய் செலவில், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து, உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர், காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதி தனியார் பள்ளிகளின் மாணவ- - மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.
இதில், பங்கேற்ற மாணவ - -மாணவியருக்கு நினைவு கேடயங்களை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். விருது பெற்றவர்கள் மற்றும் காவல் துறையினர் கலெக்டருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இவ்விழாவில், காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி., சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட வன அலுவலர் ரவிமீனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.