/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆலடி பாலதர்ம சாஸ்தா கோவிலில் 7வது ஆண்டு உற்சவம் நிறைவு
/
ஆலடி பாலதர்ம சாஸ்தா கோவிலில் 7வது ஆண்டு உற்சவம் நிறைவு
ஆலடி பாலதர்ம சாஸ்தா கோவிலில் 7வது ஆண்டு உற்சவம் நிறைவு
ஆலடி பாலதர்ம சாஸ்தா கோவிலில் 7வது ஆண்டு உற்சவம் நிறைவு
ADDED : நவ 12, 2024 08:38 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெரு, பாலதர்ம சாஸ்தா கோவிலில், 7வது ஆண்டு உற்சவம் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடந்த 9ம் தேதி கொடி மரத்திற்கும், பாலதர்ம சாஸ்தாவுக்கும் நவநதிநீர் அபிேஷகமும், மஹாதீபாராதனையும், மாலை பால விநாயகர், பாலமுருகர் வீதியுலா நடந்தது.
கடந்த 10ம் தேதி காலை 8:00 மணிக்கு ஆகாய கன்னியம்மனுக்கு சிறப்பு அபிேஷகமும், பால்குட ஊர்வலமும், மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவமும், இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள், பாலதர்ம சாஸ்தாவுக்கு திருவீதியுலா புறப்பாடும் நடந்தது.
நேற்று முன்தினம், காலை 9:15 மணிக்கு சங்கல்பமும், தொடர்ந்து மஹா கணபதி, சுதர்சன ஹோமம், பாலதர்மசாஸ்தாவுக்கு 1008 சஹஸ்ரநாமம் உள்ளிட்டவையும், மாலை சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
உற்சவம் நிறைவு நாளான நேற்று, காலை 8:00 மணிக்கு, கொடி மரம் மற்றும் பாலதர்ம சாஸ்தாவுக்கு சிறப்பு பஞ்சகவ்ய அபிஷேகம் நடந்தது.

