/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
10ம் வகுப்பு தேர்வில் 94.85 சதவீதம் பேர் தேர்ச்சி; 32 அரசு பள்ளிகள் சென்டம் மாநில அளவில் 32வது இடத்திலிருந்து 16க்கு காஞ்சி முன்னேற்றம்
/
10ம் வகுப்பு தேர்வில் 94.85 சதவீதம் பேர் தேர்ச்சி; 32 அரசு பள்ளிகள் சென்டம் மாநில அளவில் 32வது இடத்திலிருந்து 16க்கு காஞ்சி முன்னேற்றம்
10ம் வகுப்பு தேர்வில் 94.85 சதவீதம் பேர் தேர்ச்சி; 32 அரசு பள்ளிகள் சென்டம் மாநில அளவில் 32வது இடத்திலிருந்து 16க்கு காஞ்சி முன்னேற்றம்
10ம் வகுப்பு தேர்வில் 94.85 சதவீதம் பேர் தேர்ச்சி; 32 அரசு பள்ளிகள் சென்டம் மாநில அளவில் 32வது இடத்திலிருந்து 16க்கு காஞ்சி முன்னேற்றம்
ADDED : மே 17, 2025 01:22 AM
காஞ்சிபுரம்:பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 94.85சதவீதம் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு 32வது இடத்தில் இருந்தது இம்முறை 16வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 32 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழகம் முழுதும் நேற்று வெளியிடப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாணவ - மாணவியர் தங்களின் தேர்வு முடிவுகள், மதிப்பெண் விபரங்களை மொபைல் போன்களில் ஆர்வத்துடன் பார்த்து தெரிந்து கொண்டனர்.
மாவட்டத்தில், 183 பள்ளிகளைச் சேர்ந்த, 7,748 மாணவர், 7,450 மாணவியர் என, 15,198 பேர் தேர்வில் பங்கேற்றனர். இதில், 7,207 மாணவர், 7208 மாணவியர் என, 14,415 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது, 94.85 சதவீதமாகும். கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 87.55 ஆக இருந்தது. கடந்தாண்டை காட்டிலும், 7.3 சதவீதம் இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் அதிகமாகி உள்ளது.
மாணவர்கள் 93.02 சதவீதமும், மாணவியர் 96.75 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களை காட்டிலும், 3.73 சதவீதம் மாணவியர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மாவட்ட வாரியான தர வரிசையில், 32வது இடத்தை கடந்தாண்டு பெற்றது. இந்தாண்டு, தேர்ச்சி சதவீதம் அதிகமானதால், தமிழக அளவில் 16வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
------------------------------------ 100 சதவீத தேர்ச்சி
அரசு பள்ளிகளை பொறுத்தவரையில், 100 பள்ளிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் பங்கேற்றது. இதில், 8,341 மாணவ - மாணவியர் தேர்வில் பங்கேற்றதில், 7,787 மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது, 93.36 சதவீத தேர்ச்சியாகும்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 183 பள்ளிகள் பத்தாம் வகுப்பில் பங்கேற்றன. இதில், 32 அரசு பள்ளிகள் உட்பட 77 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
கடந்தாண்டு இரண்டு அரசு பள்ளிகள் மட்டுமே, 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 32 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
பிளஸ் 1 தேர்வில்...
பிளஸ் 1 தேர்வுக்கான முடிவுகளும் நேற்று வெளியிடப்பட்டன.
பிளஸ் 1 தேர்வில், காஞ்சிபுரம் மாவட்டம், 88.18 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.
மாவட்ட அளவில், அரசு, தனியார் என, 108 பள்ளிகள், பிளஸ் 1 தேர்வில் பங்கேற்றன. இதில், 14,549 மாணவ - மாணவியர் தேர்வெழுதினர். இதில், 12,549 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழக அளவில் கடந்தாண்டு 33வது இடத்தில் இருந்த காஞ்சிபுரம் மாவட்டம், 34வது இடத்தை இம்முறை பிடித்துள்ளது.
தேர்வில் பங்கேற்ற பள்ளிகளில், 21 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.அரசு பள்ளிகளை பொறுத்தவரையில், 7,813 மாணவ - மாணவியர் தேர்வெழுதினர். இதில், 6,425 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 82.23 சதவீதமாகும். இரு அரசு பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.