/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சீரழியும் வெள்ளகுளம் சீரமைக்க கோரிக்கை
/
சீரழியும் வெள்ளகுளம் சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜன 08, 2025 09:33 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே உள்ள பொன்னேரி அம்மன் கோவில் எதிரில், வெள்ளகுளம் உள்ளது. பழமையான இக்குளம் அப்பகுதி நிலத்தடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இக்குளத்து நீரை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதிவாசிகள் வீட்டு உபயோக தேவைக்கு பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்தில் செடி, கொடிகள், கோரைப்புற்கள் மண்டி குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. வீட்டு உபயோக கழிவுநீர் விடப்படுவதால், குளத்து நீர் மாசடைந்துள்ளது. மேலும், குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளால் குளத்தில் பரப்பளவு வெகுவாக குறைந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், நாளடைவில் குளமே இல்லாத சூழல் உருவாகும் நிலை உள்ளது.
எனவே, வெள்ளகுளம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.