/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அடிப்படை வசதிகள் இல்லாத கட்டடத்தில் இயங்கும் சுகாதார நிலையம்
/
அடிப்படை வசதிகள் இல்லாத கட்டடத்தில் இயங்கும் சுகாதார நிலையம்
அடிப்படை வசதிகள் இல்லாத கட்டடத்தில் இயங்கும் சுகாதார நிலையம்
அடிப்படை வசதிகள் இல்லாத கட்டடத்தில் இயங்கும் சுகாதார நிலையம்
ADDED : ஏப் 01, 2025 11:43 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி கிராமத்தில், அரசு துணை சுகாதார நிலையம் இயங்கி வந்தது. இந்த சுகாதார நிலையத்தை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர் மருத்துவ சேவை பெற்று வந்தனர்.
கடந்த 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டடம், பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, துணை சுகாதார நிலையம் அப்பகுதியில் உள்ள வாடகை கட்டடத்தில், மூன்று ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இங்கு, போதிய இடவசதி மற்றும் கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளது. இதனால், துணை சுகாதார நிலையத்திற்கு வருவோர், பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், கர்ப்பிணிகள் மாதாந்திர பரிசோதனைக்கு வரும்போது, காற்றோட்ட வசதி இல்லாததால் சிரமப்படுகின்றனர்.
எனவே, பழுதடைந்த சுகாதார நிலைய கட்டடத்தை அகற்றி, புதிய துணை சுகாதார நிலைய கட்டடம் அமைக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.