/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதாம் பாக்கெட்டில் நெளிந்த புழு? கடையில் அதிகாரிகள் சோதனை
/
பாதாம் பாக்கெட்டில் நெளிந்த புழு? கடையில் அதிகாரிகள் சோதனை
பாதாம் பாக்கெட்டில் நெளிந்த புழு? கடையில் அதிகாரிகள் சோதனை
பாதாம் பாக்கெட்டில் நெளிந்த புழு? கடையில் அதிகாரிகள் சோதனை
ADDED : மார் 03, 2024 01:24 AM

திருநின்றவூர்:திருநின்றவூர் அடுத்த வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த், 30. இவர், வீட்டில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றும் நிரஞ்சன், 28, என்பவரிடம், குழந்தைக்கு பாதாம் வாங்கி வரும்படி நேற்று முன்தினம் கேட்டுள்ளார்.
நிரஞ்சன், நெமிலிச்சேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் சென்று பாதம் வாங்கி வந்தார். பாதாம் பாக்கெட்டை பிரித்தபோது, அதில் புழு ஒன்று நெளிந்து கொட்டிருந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த நிரஞ்சன், மீண்டும் கடைக்கு சென்று கேட்டபோது, கடைக்காரர்கள் அவரை மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. அரவிந்த் இது குறித்து, 'ஆன்லைன்' வாயிலாக போலீசில் புகார் அளித்தார்.
கடையில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, 'நிரஞ்சனை மிரட்டியதாக கூறப்பட்ட சம்பவம் எதுவும் நடக்கவில்லை' என தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று காலை கடையில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வேலவன், 'பாதாம், பிஸ்தா மற்றும் ஆப்ரிகாட்' ஆகியவற்றின் உணவு மாதிரியை எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

