ADDED : அக் 01, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் அடுத்த முள்ளிகொளத்துாரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நிஷாந்தி, 23. பல்லாவரம், தனியார் கல்லுாரியில், எல்.எல்.பி., சட்டப் படிப்பு முதலாமாண்டு பயின்றார்.
இவர், முள்ளிகொளத்துாரில் இருந்து செங்கல்பட்டிற்கு, தினமும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் செல்வார்.
கல்லுாரி செல்வதற்காக, நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்ட அவர், திருக்கழுக்குன்றம், ஒரகடம் சாலை சந்திப்பு வளைவு பகுதியில், காலை 6:00 மணிக்கு கடந்தபோது, கல்பாக்கம் நோக்கி சென்ற தனியார் பேருந்து, ஸ்கூட்டரில் மோதியது.
இதில் நிஷாந்தி உயிரிழந்தார். அவரது தந்தை, திருக்கழுக்குன்றம் போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.