/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சமூக விரோதிகளின் கூடாரமான பயன்பாடற்ற பள்ளி கட்டடம்
/
சமூக விரோதிகளின் கூடாரமான பயன்பாடற்ற பள்ளி கட்டடம்
சமூக விரோதிகளின் கூடாரமான பயன்பாடற்ற பள்ளி கட்டடம்
சமூக விரோதிகளின் கூடாரமான பயன்பாடற்ற பள்ளி கட்டடம்
ADDED : நவ 28, 2024 11:43 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, 5வது வார்டில் வல்லப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்குள்ள வேளாளர் தெருவில் இயங்கி வந்த அரசு தொடக்கப் பள்ளி கட்டடம், மிகவும் பழுதடைந்ததை அடுத்து, அதே தெருவில் மாற்று கட்டடம் ஏற்படுத்தப்பட்டு, 10 ஆண்டுகளாக புதிய கட்டடத்தில் பள்ளி இயங்குகிறது.
எனினும், பயன்பாடற்ற பழுதான பழைய பள்ளி கட்டடம் இதுவரை அகற்றப்படாமல் உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:
பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய இக்கட்டடம், எப்போது வேண்டுமானாலும், இடிந்து விழக்கூடும் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும், கட்டடத்தை சுற்றி புதர்கள் நிறைந்துள்ளதால், விஷ ஜந்துக்கள் உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
கைவிடப்பட்ட பள்ளி கட்டடம் அருகாமையில் அங்கன்வாடி மையம் இயங்குகிறது. இதனால், குழந்தைகள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது.
எனவே, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் அக்கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர்கள் கூறினர்.