/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
/
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : செப் 05, 2025 01:54 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் மேம்பாலம் அருகே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்களால், விபத்து ஏற்படும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
வண்டலுார் -- வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரகடம் உள்ளது.
இங்கு, உணவகம், ஜவுளிக்கடை, மருந்தகம், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஒரகடத்தை சுற்றியுள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தினமும் பல்வேறு தேவைக்காக ஒரகடம் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், ஒரகடம் சந்திப்பில் உள்ள உணவகங்களுக்கு வரும், கனரக வகன ஓட்டிகள், தங்களின் வாகனங்களை, மேம்பாலம் அருகே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நிறுத்துகின்றனர்.
இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ள க னரக வாகனங்களின் மீது மோதி, விபத்துக்குள்ளாகி வருகின்றன. முக்கிய சந்திப்பு சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, போலீசார் நட வடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.