/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.100 வாங்கும் மின்வாரிய லைன்மேன்கள் தர மறுப்போரிடம் வாக்குவாதம் செய்து அடம்

ADDED : அக் 18, 2024 08:09 PM
காஞ்சிபுரம்:மின் கம்பங்களில் ஏற்படும் மின் இணைப்பு பிரச்னை, வீடுகளில் உள்ள மீட்டரில் ஏற்படும் சிறு கோளாறு போன்றவைக்கு, அருகில் உள்ள மின்வாரிய அலுவலகங்களை அப்பகுதியில் வசிப்பவர்கள் நாடுகின்றனர்.
அவ்வாறு, காஞ்சிபுரம் நகரப்பகுதி மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வசிப்போர், மின் இணைப்பு பிரச்னைக்காக, மின்வாரிய லைன்மேன்களை அழைக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட புகார்தாரர் வீடுகளுக்கு சென்று, மின் இணைப்பு பிரச்னையை சரிசெய்யும் லைன்மேன்கள், புகார் தெரிவிக்கும் நுகர்வோரிடம், குறைந்தபட்சம் 100 ரூபாயாவது லஞ்சமாக கேட்கின்றனர்.
நுகர்வோர் பணத்தை தர மறுத்தால், லைன்மேன்கள் வாக்குவாதம் செய்வதும், அவர்களை தரக்குறைவாக பேசுவதும் பல இடங்களில் தொடர்கிறது.
சில நுகர்வோர், லைன்மேன்களுக்கு, 50 ரூபாய் தர முற்படும்போது, கட்டாயமாக 100 ரூபாய் தர வேண்டும் என, லைன்மேன்கள் அடம்பிடித்து வாங்கி செல்கின்றனர்.
காஞ்சிபுரம் நகர்ப்பகுதி மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இதுபோன்ற செயல்களில் பலரும் ஈடுபடுகின்றனர். 'லைன்மேன்கள் நுகர்வோரிடம் லஞ்சம் ஏதும் பெறக்கூடாது' என, மின்வாரிய உயரதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என, நுகர்வோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.