/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'ஆன்லைனில்' வேளாண் பட்ஜெட் கருத்துக்கேட்பு கூட்டம் கருத்து தெரிவிக்க முடியவில்லை என குற்றச்சாட்டு

ADDED : பிப் 15, 2024 02:35 AM
காஞ்சிபுரம்:சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தொடர்பான, விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம் கடந்தாண்டு நேரில் நடத்தப்பட்டது. ஆனால், இந்தாண்டுக்கான கருத்துக்கேட்பு கூட்டம், 'ஆன்லைனில்' நடத்தப்பட்டுள்ளது.
வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கான கருத்துக்கேட்பு கூட்டம், கடந்த 10ம் தேதி, 'ஆன்லைனில்' நடந்துள்ளது.
இதில், வேளாண் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர். காஞ்சிபுரத்தில், வேளாண் துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில், முன்னோடி விவசாயிகள், சங்க பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர்.
இதில், தங்களது கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கவில்லை என விவசாய சங்க பிரநிதிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலர் கே.நேரு கூறியதாவது:
வேளாண் பட்ஜெட் கருத்துக்கேட்பு கூட்டம் நேரில் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், 'ஆன்லைனில்' நடத்தப்பட்டது எங்களுக்கு விருப்பமில்லை. மாலை 5:00 மணிக்கு மேலாக கூட்டம் துவங்கும் என அறிவிக்கப்பட்டு, 4:00 மணிக்கே துவங்கிவிட்டனர்.
அழைக்கப்பட்ட விவசாயிகளுக்கும், சங்க பிரதிநிதிகளும் கருத்து தெரிவிக்க அனுமதிக்கவே இல்லை. அதிகாரிகள் தேர்வு செய்தவர்கள் மட்டுமே பேச முடிந்தது. பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய கருத்துகளை தெரிவிக்க இருந்தோம்.
ஆனால், எந்த கருத்தும் தெரிவிக்க முடியாதது விவசாயிகளுக்கே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.