/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இடம் ஒதுக்கியாச்சு... வீடு என்னாச்சு? கரசங்கால் நரிக்குறவர்கள் காத்திருப்பு

ADDED : அக் 26, 2024 12:47 AM

படப்பை:குன்றத்துார் ஒன்றியத்தில் கரசங்கால் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, கரசங்கால்- - மணிமங்கலம் சாலையோரம் 41 நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த சாலையில் ஏராளமான கனரக வாகனங்கள் செல்வதால், இங்கு வசிக்கும் நரிக்குறவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நரிக்குறவர் மக்களுக்கு வேறு பகுதியில் வசிக்க இடம் ஒதுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, படப்பை அருகே செரப்பணஞ்சேரி கிராமத்தில், ஒரு குடும்பத்திற்கு 2 சென்ட் இடம் என, தலா 41 நரிக்குறவர் குடும்பத்திற்கு இலவசமாக நிலம் வழங்கப்பட்டன. இங்கு, அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை வீடு கட்டித்தரப்படவில்லை.