/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாட்கோ கடன் பெறும் பயனாளிகளுக்கு மானியம் கிடைக்கல வங்கிகள் நிராகரிப்பதாக விண்ணப்பதாரர்கள் புலம்பல்
/
தாட்கோ கடன் பெறும் பயனாளிகளுக்கு மானியம் கிடைக்கல வங்கிகள் நிராகரிப்பதாக விண்ணப்பதாரர்கள் புலம்பல்
தாட்கோ கடன் பெறும் பயனாளிகளுக்கு மானியம் கிடைக்கல வங்கிகள் நிராகரிப்பதாக விண்ணப்பதாரர்கள் புலம்பல்
தாட்கோ கடன் பெறும் பயனாளிகளுக்கு மானியம் கிடைக்கல வங்கிகள் நிராகரிப்பதாக விண்ணப்பதாரர்கள் புலம்பல்
ADDED : ஜூன் 01, 2025 08:29 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தாட்கோ திட்டத்தில் கடன் பெறும் பயனாளிகளுக்கு அரசு மானியம் கிடைக்கவில்லை. விண்ணப்பதாரர்களின் படிவங்களை வங்கி நிறுவனங்கள் புறக்கணிப்பதாக பல தரப்பினர் இடையே புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் எல்லப்பன் நகரில், தாட்கோ அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்களில், 40 சதவீதத்தினருக்கு மேல் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
தாட்கோ திட்டத்தில், நிலம் வாங்குது, நிலம் மேம்படுத்துவது, இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டம், கறவை மாடு வாங்குவது உள்ளிட்ட பல்வேறு கடன் பெறும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பல்வேறு கடன் பெறும் திட்டங்களுக்கு, 35 சதவீதம் அரசு மானியமும், ஐந்து சதவீதம் பயனாளிகளின் பங்களிப்பும், 60 சதவீதம் பொதுத்துறை வங்கிகளின் வாயிலாக கடன் வசதி ஏற்படுத்தி, தாட்கோ நிறுவனம் செய்து கொடுக்கிறது.
தாட்கோ நிறுவனம் மானியம் வழங்க முன் வந்தாலும், பொதுத்துறை வங்கிகள் எளிதாக பயனாளிகளுக்கு கடனுதவி வழங்குவதில்லை. மாறாக கடன் கேட்டு விண்ணப்பித்தோரை பொதுத்துறை வங்கி நிறுவனங்கள் இழுத்தடிக்கின்றன.
குறிப்பாக, அரசு வழங்கும் மானியம் அந்தந்த பொதுத்துறை வங்கி நிறுவனங்களுக்கு சென்றால் மட்டுமே, பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.
மானியம் கிடைக்காத நபர்களுக்கு கடனுதவி வழங்க பொதுத்துறை வங்கிகள் மறுப்பு தெரிவிப்பதற்கு மாறாக மழுப்பலாக பதில் அளித்து தட்டிக்கழிக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2021 - 22ம் நிதி ஆண்டு 218 நபர்களுக்கு, 3.55 கோடி ரூபாய்; 2022 - 23ம் நிதி ஆண்டு 592 நபர்களுக்கு, 5.92 கோடி ரூபாய்; 2023 - 24ம் நிதி ஆண்டு, 288 நபர்களுக்கு, 4.28 கோடி ரூபாய்; 2024 - 25ம் நிதி ஆண்டு 315 நபர்களுக்கு, 8 கோடி ரூபாய் வரையில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என, தாட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும், 500க்கும் மேற்பட்டோர் தாட்கோ கடனுதவி பெற விண்ணப்பிக்கின்றனர். இருப்பினும், குறைந்த நபர்களுக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படுகிறது. மீதம் இருக்கும், 50 சதவீதத்தினருக்கு கடனுதவி பெற காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சிலருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இதனால், பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது என, பயனாளிகள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தாட்கோ கடன் கேட்டு விண்ணப்பித்த நபர்கள் சிலர் கூறியதாவது:
கடன் கேட்டு தாட்கோவில் விண்ணப்பிக்கும் போது, எந்த வங்கி என, கேட்கிறது. அந்த வங்கி பெயரை பூர்த்தி செய்து கொடுத்தால், சம்மந்தப்பட்ட வங்கி நிறுவனம் கடன் வழங்க பரிந்துரை கடிதம் வழங்குவதில்லை. மாறாக மானியம் வந்தால் கொடுக்கிறோம் என, அதிகாரிகள் தட்டிக் கழிக்கின்றனர். இதுபோல இருந்தால், நாங்கள் எப்படி கடன் பெற்று முன்னேறுவது தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தாட்கோ அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தாட்கோவில் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்களை முறையாக அந்தந்த வங்கிகளுக்கு பரிந்துரை செய்து விடுகிறோம். வங்கி நிறுவனங்கள் விண்ணப்பதாரர்களின் சிபில் ஸ்கோர் என அழைக்கப்படும் கடன் பெற தகுதி புள்ளிகள் குறைவாக இருப்போருக்கு கடன் வழங்க அனுமதி அளிப்பதில்லை.
அதை நேரடியாக விண்ணப்பதாரரிடம் கூறிவிட்டால், எந்த பிரச்னையும் இருக்காது. வங்கி நிறுவனங்கள் செய்யும் தவறுக்கு, நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.