/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பட்டாவில் திருத்தம் செய்ய விண்ணப்பம் வரவேற்பு
/
பட்டாவில் திருத்தம் செய்ய விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மே 23, 2025 01:57 AM
காஞ்சிபுரம்:பட்டாவில் திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம் முழுதும் உள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இணைய வழியில் எளிதில் பார்வையிடும். வகையில் https://eservices.tn.gov.in/ என்ற இணையதளம் பொது மக்களின் பயன்பாட்டில் உள்ளது.
இருப்பினும், சிட்டாவில், பட்டாதாரர்களில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும் அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.
எனவே. பட்டாவிலுள்ள இறந்த நில உடைமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக, உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க, பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ - சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது சிட்டிசன் போர்ட் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில் ஜமாபந்தி முகாமில், பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.