/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரகடத்தில் வரும் 11ல் தொழில் பழகுனர் மேளா
/
ஒரகடத்தில் வரும் 11ல் தொழில் பழகுனர் மேளா
ADDED : ஆக 07, 2025 01:44 AM
காஞ்சிபுரம்,:ஒரகடத்தில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், வரும் 11ம் தேதி, தேசிய தொழில் பழகுனர் பயிற்சி நடைபெற உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திகுறிப்பு:
ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், பல்வேறு தொழில் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு, பிரதமரின் தேசிய தொழிற் பழகுனர் மேளா, மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளை கொண்டு நடத்தப்படுகிறது.
தொழிற் பழகுனர் மேளா, வரும் 11ம் தேதி காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் தகுதியுடைய ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள், எட்டாம் வகுப்பு வரை படித்த, இடைநின்ற, 10ம் வகுப்பு வரை படித்த, இடைநின்ற மற்றும் பிளஸ் 2 படித்த, இடைநின்ற மாணவர்களும் தொழில் பழகுனர் பயிற்சியில் சேரலாம். பயிற்சி பெற்று தேசிய தொழில் பழகுனர் சான்றிதழ் பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.