ADDED : ஆக 07, 2025 01:44 AM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் நகரிலும், சுற்றியுள்ள கிராமப்புறங்களிலும் சிறிய அளவிலான வெள்ளை நிற பூச்சிகளால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக சிறிய அளவிலான துாசி போன்ற வெள்ளை நிற பூச்சிகள், காலை, மாலை நேரங்களில் பறக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், மக்களும் சிரமப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி முழுதும் அதிக அளவிலான வெள்ளை நிற பூச்சிகளால், மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணியர், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். வாகன ஓட்டிகளின் காது, மூக்கு, கண்களில் விழுந்து சிரமத்தை ஏற்படுத்துகிறது.
துாசி போன்ற வெள்ளை நிற பூச்சிகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் சிரமம் அடைவதை கருத்தில் கொண்டு உடனடியாக மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை, மாநகராட்சி நிர்வாகம், இது குறித்து ஆய்வு செய்து தடுக்க வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.