/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் நபார்டு திட்டத்தில் 3 சாலைகள் போடுவதற்கு அனுமதி
/
காஞ்சியில் நபார்டு திட்டத்தில் 3 சாலைகள் போடுவதற்கு அனுமதி
காஞ்சியில் நபார்டு திட்டத்தில் 3 சாலைகள் போடுவதற்கு அனுமதி
காஞ்சியில் நபார்டு திட்டத்தில் 3 சாலைகள் போடுவதற்கு அனுமதி
ADDED : ஆக 01, 2025 10:20 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 5.61 கி.மீ., சாலையை, நபார்டு திட்டத்தின் கீழ் சீரமைக்க, 3.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 596 கி.மீ., கிராமப்புறச் சாலைகள் மற்றும், 400 கி.மீ., ஒன்றிய சாலைகள் என, மொத்தம் 996 கி.மீ., சாலைகள் உள்ளன.
இந்த சாலைகள் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டு போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், இச்சாலைகளை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்றிய கட்டுப்பாட்டில் 17 சாலைகள், கிராம ஊராட்சிகளில் 22 சாலைகள் என, 39 சாலைகளை சீரமைக்க, 36.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், பல சாலைகளை புதுப்பிக்க முடியாத அளவிற்கு, நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற சாலைகளை, தேசிய ஊரக வேளாண் வளர்ச்சி திட்டம் என, அழைக்கப்படும் நபார்டு திட்டத்தில், 3.33 கோடி ரூபாய் செலவில் மீண்டும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, சிறுவாக்கம், காரை, இலுப்பப்பட்டு ஆகிய கிராமங்களில், 5.61 கி.மீ., துார சாலைகள் போடப்பட உள்ளன.
இதற்கு, கடந்த மாதம் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், காரை கிராமத்தில் பணிகள் துவக்க பூமி பூஜை போடப்பட்டுள்ளது.