/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் நாளை பிரம்மோத்சவம் துவக்கம்
/
அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் நாளை பிரம்மோத்சவம் துவக்கம்
அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் நாளை பிரம்மோத்சவம் துவக்கம்
அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் நாளை பிரம்மோத்சவம் துவக்கம்
ADDED : ஏப் 11, 2025 10:36 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே திருத்தலம் என, அழைக்கப்படும் புஷ்பவல்லி தாயார் சமேத அஷ்டபுஜ பெருமாள் கோவில், பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோத்சவம் விமரிசையாக நடக்கும் நடப்பு ஆண்டுக்கான பிரம்மோத்சவம், நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
உத்சவத்தையொட்டி தினமும், காலை, 6:00 மணிக்கும் மாலை, 6:00 மணிக்கும் சுவாமிபல்வேறு வாகனத்தில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதி வழியாக உலா வருகிறார்.
இதில், மூன்றாம் நாள் உத்சவமான வரும் 15ல், காலை கருடசேவைஉத்சவமும், ஏழாம் நாள் உத்சவமான வரும் 19ல் காலை தேரோட்டமும் நடக்கிறது. வரும் 22ல் மாலை வெட்டிவேர் சப்பரத்துடன் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.
உத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார், செயல் அலுவலர் ராஜமாணிக்கம், அறங்காலர்கள், கோவில் அர்ச்சகர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.