/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மனைவி, இரு மகன்களை கொலை செய்து பிராட்வே 'சிசிடிவி' வியாபாரி தற்கொலை? ஈஞ்சம்பாக்கத்தில் பயங்கரம்

ADDED : அக் 22, 2025 11:22 PM

சென்னை: ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில், பிராட்வே 'சிசிடிவி' கேமரா வியாபாரி குடும்பத்தோடு இறந்து கிடந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் தற்கொலை செய்தனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி தாமோதர குப்தா, 45; பி.பி.ஏ., பட்டதாரி. இவர், பாரிமுனையில் 'சிசிடிவி' எனும் கண்காணிப்பு கேமரா விற்பனை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரேவதி, 36. இவர்களுக்கு, ரித்வித் ஹர்ஷத், 15, திக்சித் ஹர்ஷத், 11, என இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்தனர்.
இவர்கள், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள 'சாகாஸ்' என்ற குடியிருப்பில் மூன்று மாதமாக வசித்தனர். இந்த நிலையில், சேலத்தில் வசிக்கும் சிரஞ்சீவியின் மாமா முரளிக்கு, நேற்று அதிகாலை சிரஞ்சீவி 1 லட்சம் ரூபாய் அனுப்பி உள்ளார்.
இது குறித்து கேட்க, சிரஞ்சீவியின் மொபைல் போனில் முரளி பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், போன் எடுக்கவில்லை. சந்தேகத்தின்படி, சாலிகிராமத்தில் வசிக்கும் உறவினர் சாய்கிருஷ்ணா என்பவரிடம், வீட்டில் சென்று பார்க்க கூறினார்.
அவர், ஈஞ்சம்பாக்கம் வீட்டிற்கு சென்றபோது, கதவு திறந்திருந்தது. சிரஞ்சீவி கழிப்பறையில் கை, கழுத்தில் வெட்டுபட்ட நிலையில் பலியாகி கிடந்தார். ரேவதி, ரித்வித் ஹர்ஷத், திக்சித் ஹர்ஷத் ஆகியோர், பாலித்தீன் பையால் முகம் மூடிய நிலையில் இறந்து கிடந்தனர்.
தகவலின்படி, நீலாங்கரை போலீசார், நான்கு உடல்களையும் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். வீட்டில் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. போலீசார், கொலை மற்றும் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.