/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய நிறுத்தம் ஒரகடத்தில் பேருந்து பயணியர் அவதி
/
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய நிறுத்தம் ஒரகடத்தில் பேருந்து பயணியர் அவதி
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய நிறுத்தம் ஒரகடத்தில் பேருந்து பயணியர் அவதி
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய நிறுத்தம் ஒரகடத்தில் பேருந்து பயணியர் அவதி
ADDED : ஜன 07, 2025 07:19 AM

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை சந்திக்கும் பகுதியில், ஒரகடம் மேம்பாலம் உள்ளது. பிரதான தொழிற்சாலை பகுதியாக உள்ள ஒரகடம் சந்திப்பில், வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் கீழே, ஸ்ரீபெரும்புதுார்- - சிங்க பெருமாள் கோவில் நெடுஞ்சாலை செல்கிறது.
இங்கு, 100க்கும்மேற்பட்ட வணிக கடைகள் உள்ளன. அதேபோல்,ஒரகடம் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து, அரசு பேருந்து வாயிலாக தினமும் ஒரகடம் வந்துசெல்கின்றனர்.
ஒரகடம் மேம்பாலத்தின் கீழ், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் அமர இரும்பு நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.
பல்வேறு தேவைக்காக ஒரகடம் வருவோர், தங்களின் இருசக்கரவாகனங்களை ஒரகடம் மேம்பாலத்தின் கீழ்பயணியர் நாற்காலிக்கு முன் நிறுத்துகின்றனர்.
இதனால், பேருந்து நிறுத்தத்திற்கு வரும்பயணியர், நாற்காலியில் அமர முடியாமல் கால்கடுக்க நிற்க வேண்டியஅவலம் நீடிக்கிறது.
மேலும், பேருந்து நிறுத்தை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களால், அங்கு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சாலை நடுவே நின்றுபயணிரை ஏற்றி செல்கிறது. இதனால், அடிக்கடிவிபத்து ஏற்பட்டு வரு கிறது.
இரவு நேரங்களில் அப்பகுதியில் சமூக விரோதிகள் சிலர் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால், இரவு நேரங்களில் வரும் பெண் பயணியர் அச்சத்துடன் பேருந்திற்கு காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
எனவே, ஒரகடம் மேம்பாலத்தின் கீழ், பயணியருக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.