/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிளாம்பாக்கத்திலிருந்து 11 இடத்திற்கு பேருந்து
/
கிளாம்பாக்கத்திலிருந்து 11 இடத்திற்கு பேருந்து
ADDED : பிப் 02, 2024 12:28 AM
சென்னை:கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கடந்த டிச., 30ல் திறக்கப்பட்டது. அனைத்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணியர் கிளாம்பாக்கத்திற்கு செல்ல மாற்று ஏற்பாடுகளை செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சி.எம்.டி.ஏ., வெளியிட்ட அறிக்கை:
கிளாம்பாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லுார், வேளச்சேரி, திருவான்மியூர், தி.நகர், மாதவரம், அம்பத்துார், திரு.வி.க., நகர், செங்குன்றம், ஆவடி, பூந்தமல்லி, சிறுசேரி ஆகிய 11 இடங்களுக்கு, இணைப்பு பேருந்து சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து 642 ஆட்டோக்கள், 512 கார்கள் பதிவு செய்து இயங்கி வருகின்றன. வெளிவட்ட சாலையில் ஆம்னி பேருந்து நிறுத்துமிட கட்டுமான பணிகள், ஆகஸ்டில்முடிக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

