/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகள் உத்திரமேரூரில் பயணியர் அவதி
/
நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகள் உத்திரமேரூரில் பயணியர் அவதி
நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகள் உத்திரமேரூரில் பயணியர் அவதி
நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகள் உத்திரமேரூரில் பயணியர் அவதி
ADDED : டிச 26, 2024 12:59 AM

உத்திரமேரூர், உத்திரமேரூர் பேருந்து நிலையத்திற்கு முன், எதிரே மற்றும் அம்பேத்கர் சிலை எதிரே, சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 49 லட்சம் ரூபாய் செலவில், மூன்று பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
இந்த பயணியர் நிழற்குடைகளை வந்தவாசி, சென்னை, திருவண்ணாமலை செல்லும் பயணியர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சற்று துாரம் சென்று நிற்கிறது.
இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பயணியர் அங்கும் இங்கும்அலைந்து, பேருந்து ஏற வேண்டிய நிலை உள்ளது.
இதை தவிர்க்க, உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பயணியர் நிழற்குடை பகுதியில், 'பேருந்து நிறுத்தும் இடம்' என்ற பதாகை வைக்கப்பட்டுள்ளது.
பேருந்து ஓட்டுநர்கள் இதை கண்டுகொள்ளாமல், எப்போதும் போல சற்று துாரம் சென்று, பேருந்தை நிறுத்தி வருகின்றனர். எனவே, பயணி யரின் நலனை கருத்தில் கொண்டு, பயணியர் நிழற்குடையில் பேருந்தை நிறுத்த, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர்கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பயணியர் நலன் கருதி, நிழற்குடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து, நிழற்குடையில் பேருந்துகள் நின்று செல்ல, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.