/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிறுத்தத்தில் நிற்கும் பேருந்துகள் உத்திரமேரூர் பயணியர் மகிழ்ச்சி
/
நிறுத்தத்தில் நிற்கும் பேருந்துகள் உத்திரமேரூர் பயணியர் மகிழ்ச்சி
நிறுத்தத்தில் நிற்கும் பேருந்துகள் உத்திரமேரூர் பயணியர் மகிழ்ச்சி
நிறுத்தத்தில் நிற்கும் பேருந்துகள் உத்திரமேரூர் பயணியர் மகிழ்ச்சி
UPDATED : டிச 28, 2024 07:26 AM
ADDED : டிச 28, 2024 01:25 AM

உத்திரமேரூர்,:உத்திரமேரூர் பேருந்து நிலையத்திற்கு முன், எதிரே மற்றும் அம்பேத்கர் சிலை எதிரே, சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 49 லட்சம் ரூபாயில், மூன்று பயணியர் நிழற்கூடை கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
இந்த பயணியர் நிழற்குடைகளை வந்தவாசி, சென்னை, திருவண்ணாமலை செல்லும் பயணியர் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இந்த நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காமல், சற்று தூரம் சென்று நின்று பயணியரை ஏற்றிச் சென்றனர்.
இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணியர் அங்கும் இங்கும் அலைந்து, பேருந்து ஏற வேண்டிய நிலை இருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, நேற்று பேரூராட்சி நிர்வாகத்தினர், பயணியர் நிழற்குடையின் கீழ் இருசக்கர வாகனங்களை நிறுத்தாத வகையில், 'பேரிகார்டுகள்' அமைத்து, பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, பயணியர் நிழற்குடையில் இருக்கைகள் அமைக்கப்பட்டும் உள்ளது. மேலும், பயணியர் நிழற்குடையில் பேருந்துகள் நின்று செல்வதால், பயணியர் சிரமமின்றி பயணம் செய்து வருகின்றனர்.