/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு
/
பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : அக் 23, 2025 09:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டாரத்தில் சம்பா பருவ நெல் பயிர் காப்பீடு செய்ய, விவசாயிகளுக்கு வேளாண்மை துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, வேளாண்மை உதவி இயக்குநர் முத்து லட்சுமி கூறியதாவது:
உத்திரமேரூர் வட்டாரத்தில் 73 வருவாய் கிராமங்கள் சம்பா பருவ நெல் பயிர் காப்பீடு செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில், வரும் நவ., 15ம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு, 545 ரூபாய் பிரீமியம் தொகை செலுத்தி, காப்பீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.