ADDED : நவ 14, 2026 07:16 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பழனி, 20, என்பவரை போலீசார் இன்று (நவ.,14) கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த பாலுச்செட்டிச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, விநாயகபுரம் கீழண்டை தெருவைச் சேர்ந்த பழனி, 20, என்பவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 65,000 ரூபாய் மதிப்பிலான, 1.3 கிலோ கஞ்சாவை இன்று பறிமுதல் செய்தனர்.
