/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பரந்துாரில் புதிய ஏர்போர்ட் போராட்டக்காரர்கள் மீது வழக்கு
/
பரந்துாரில் புதிய ஏர்போர்ட் போராட்டக்காரர்கள் மீது வழக்கு
பரந்துாரில் புதிய ஏர்போர்ட் போராட்டக்காரர்கள் மீது வழக்கு
பரந்துாரில் புதிய ஏர்போர்ட் போராட்டக்காரர்கள் மீது வழக்கு
ADDED : பிப் 27, 2024 10:14 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கு பிப்., 24ம் தேதி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தமிழக தொழில் துறை வெளியிட்டது. மேல்பொடவூர் கிராமத்தில், 93 ஏக்கர் நிலம், 218 பேரிடம் இருந்து கையகப்படுத்தப்பட உள்ளது.
இதற்கு, பொது அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், நிலத்தின் உரிமையாளர்களுக்கு தனித்தனியே நோட்டீஸ் வழங்கப்பட உள்ளன.
இவர்கள், 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். இதன் மீதான விசாரணை ஏப்., 4ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம், நாகப்பட்டு, மேட்டுப்பரந்துார் ஆகிய கிராமத்தினர், 137 பேர், நில எடுப்பு அலுவலகத்தை நேற்றுமுன்தினம் முற்றுகையிடுவதற்கு புறப்பட்டு செல்ல முயன்றனர்.
இவர்களை, தடுத்து நிறுத்தி, கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர். இதில், இருவர் மயங்கி விழுந்தனர்.
போராட்டக்காரர்கள் மீது, சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தனித்தனியாக, அனுமதி இன்றி ஒன்றுகூடுதல், வழிமறித்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

