/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதியில் விடப்பட்ட சிமென்ட் கல் சாலை பணி
/
பாதியில் விடப்பட்ட சிமென்ட் கல் சாலை பணி
ADDED : செப் 25, 2025 12:51 AM

ஸ்ரீபெரும்புதுார்:தத்தனுார் ஊராட்சி, கண்ணந்தாங்கல் கிராமத்தில், சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி பாதியில் விடப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், தத்தனுார் ஊராட்சிக்குட்பட்ட கண்ணந்தாங்கல் எல்லையம்மன் கோவில் தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த சாலை, பல ஆண்டுகளாக சேதடைந்து குண்டும் குழியுமாக இருந்ததையடுத்து, புதிதாக சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், 18 லட்சத்து, 75,000 ரூபாய் மதிப்பில், எல்லையம்மன் கோவில் தெருவிற்கு சிமென்ட் கல் சாலை மற்றும் சிமென்ட் கால்வாய் கடந்த மாதம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், சாலை முழுமையாக நிறைவு பெறாமல், 200 மீட்டருக்கு சிமென்ட் கல் சாலை பதிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது.
எனவே, மீதமுள்ள சாலையில், சிமென்ட் கல் பதித்து, சாலையை முழுமை படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து, ஊராட்சி அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
கண்ணத்தாங்கல் எல்லையம்மன் கோவில் தெருவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் சாலை அமைக்கப்பட்டள்ளது. ஒதுக்கப்டட்ட நிதி போதாததால், 200 மீட்டர் சாலை முழுமைபடுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது.
மீதமுள்ள சாலை பணிகளை முழுமைபடுத்த, புதிய திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு, அடுத்த வாரம் பணிகள் துவங்க உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.