/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மத்திய - மாநில அதிகாரிகள் காஞ்சி பட்டு பூங்காவில் ஆய்வு
/
மத்திய - மாநில அதிகாரிகள் காஞ்சி பட்டு பூங்காவில் ஆய்வு
மத்திய - மாநில அதிகாரிகள் காஞ்சி பட்டு பூங்காவில் ஆய்வு
மத்திய - மாநில அதிகாரிகள் காஞ்சி பட்டு பூங்காவில் ஆய்வு
ADDED : ஜன 30, 2025 12:23 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிர்பூரில், பட்டு சேலைகளை உற்பத்தி செய்யும் பட்டு பூங்கா அமைந்துள்ளது. இந்த பட்டு பூங்காவை மத்திய அரசின் ஜவுளித்துறை செயலர் நீலம் சமீராவ், இணை செயலர் ராஜீவ் சக்சேனா, இயக்குநர் அணில்குமார் மற்றும் தமிழக ஜவுளித்துறை இயக்குநர் லலிதா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பட்டு பூங்காவின் செயல் இயக்குநர் ராமநாதன் மற்றும் இயக்குநர்கள், நெசவாளர்கள், வடிவமைப்பாளர் ஆகியோரிடம் பூங்காவின் தேவைகள், குறைகள் குறித்து கேட்டறிந்தனர். பட்டு பூங்காவின் வளர்ச்சி மற்றும் பட்டுச் சேலைகளின் பயன்கள் குறித்தும் கலந்துரையாடினர்.
நெசவாளர் சேவை மையத்தின் இயக்குநர் முத்துச்சாமி மற்றும் மத்திய - மாநில அரசின் ஜவுளித்துறை அதிகாரிகள் பலரும் ஆய்வின் போது உடனிருந்தனர்.