/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சென்னை,செங்கை சிறுவர்கள் மாநில சதுரங்கத்தில் அசத்தல்
/
சென்னை,செங்கை சிறுவர்கள் மாநில சதுரங்கத்தில் அசத்தல்
சென்னை,செங்கை சிறுவர்கள் மாநில சதுரங்கத்தில் அசத்தல்
சென்னை,செங்கை சிறுவர்கள் மாநில சதுரங்கத்தில் அசத்தல்
ADDED : ஜன 28, 2025 12:11 AM

சென்னை, காசா கிராண்ட் சர்வதேச பள்ளி சார்பில், முதலாவது மாநில அளவிலான சதுரங்க போட்டி, திருவான்மியூரில் உள்ள பள்ளி வளாகத்தில், நேற்று முன்தினம் நடந்தது.
போட்டியில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட, மாநிலம் முழுதும் இருந்து, 202 பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர். அவற்றில், 43 சர்வதேச ரேட்டிங் வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
சிறுவருக்கான எட்டு வயது பிரிவில், சென்னை சரஸ்வதி வித்யாலயா பள்ளியின் கார்த்திகேயன், சிறுமியரில், சென்னை, பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் ரேஷா கோதானி ஆகியோர் முதலிடத்தை பிடித்து அசத்தினர்.
பத்து வயது சிறுவரில், செங்கல்பட்டு வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியின் சாய் ஆகாஷ், சிறுமியரில், செங்கல்பட்டு வித்யாமந்திர் எஸ்டான்சியா பள்ளியின் மித்ரா ஆகியோர் முதலிடத்தை கைப்பற்றினர்.
அதேபோல், 12 வயது சிறுவரில் திருவள்ளூர் எஸ்.வி., பள்ளியின் டேனிஷ், சிறுமியரில் சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் ஜீஷவினி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பின், 16 வயதில் திருவள்ளூர் செயின்ட் மேரிஸ் பள்ளியின் ஹரிதேவ், சென்னை வேலம்மாள் பள்ளியின் பிரிதீக் ஷா ஆகியோர் முதலிடத்தை வென்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.