ADDED : ஏப் 06, 2025 07:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றிய பா.ஜ., கட்சி சார்பில், அக்கட்சியின் 46ம் ஆண்டு விழா அய்யம்பேட்டை ஊராட்சியில் நடந்தது.
அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சிபி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் மாலதி, நரசிம்மன், வஜ்ரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவையொட்டி அய்யம்பேட்டை பகுதியில் துாய்மை பணிகள் மேற்கொள்ளும் துப்புரவு பணியாளர்களுக்கு கவுரவிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதில் துப்புரவு பணியாளர்களது சேவையை பாராட்டும் விதமாக, அவர்களுக்கு பா.ஜ., கட்சியின் பொறுப்பாளர்கள், பாதபூஜை செய்தனர்.
தொடர்ந்து, துப்பரவு பணியாளர்களோடு இணைந்து, முத்தியால்பேட்டையில் உள்ள பொது இடங்களில் குப்பை அகற்றுதல், அரசு கட்டடப் பகுதிகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட துாய்மை பணிகளை அக்கட்சியினர் மேற்கொண்டனர்.

