/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால்வாயில் அடைப்பு சந்தியப்பன் நகரில் சுகாதார சீர்கேடு
/
மழைநீர் வடிகால்வாயில் அடைப்பு சந்தியப்பன் நகரில் சுகாதார சீர்கேடு
மழைநீர் வடிகால்வாயில் அடைப்பு சந்தியப்பன் நகரில் சுகாதார சீர்கேடு
மழைநீர் வடிகால்வாயில் அடைப்பு சந்தியப்பன் நகரில் சுகாதார சீர்கேடு
ADDED : நவ 20, 2024 11:06 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சாத்தான்குட்டை தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளிட்டவை இயங்கி வருகிறது.
இப்பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் செல்லும் கால்வாய் உள்ளது.
இக்கால்வாயை மாநகராட்சி ஊழியர்கள் முறையாக பராமரிக்காதததால், சந்தியப்பன் நகர் சந்திப்பில, பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் மண் குவியல்களால் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், கழிவுநீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்குவதால் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளதோடு துர்நாற்றமும் வீசுவதால், அப்பகுதியில், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, சந்தியப்பன் நகரில், கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்கவும், திறந்து கிடக்கும் கால்வாயை சிமென்ட் சிலாப் வாயிலாக மூடவும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.