/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாதிரி பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
/
மாதிரி பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
ADDED : செப் 18, 2025 02:08 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், மாதிரி பள்ளி முன்னாள் மாணவர்கள், தலைமையாசிரியர்களுடன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று கலந்துரையாடினார்.
அரசு மாதிரி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி, நுண்கலை விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கும் மற்றும் தொழில் வழிகாட்டுதல், உயர்கல்வி தேர்வு போன்றவை குறித்து மாதிரி பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள், தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாதிரி பள்ளி மாணவர்கள் , கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர். மாதிரிப் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களின் அனுபவங்கள் குறித்தும் மற்றும் கடந்து வந்த பாதை தொடர்பாகவும் கலந்துரையாடினர்.
இந்நிகழ்விற்கு முன், சமூக நீதி நாள் உறுதிமொழியை, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், முன்னாள் மாதிரி பள்ளி மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்.