/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கான்கிரீட் கலவை இயந்திர லாரி ஸ்ரீபெரும்புதுாரில் கவிழ்ந்து விபத்து
/
கான்கிரீட் கலவை இயந்திர லாரி ஸ்ரீபெரும்புதுாரில் கவிழ்ந்து விபத்து
கான்கிரீட் கலவை இயந்திர லாரி ஸ்ரீபெரும்புதுாரில் கவிழ்ந்து விபத்து
கான்கிரீட் கலவை இயந்திர லாரி ஸ்ரீபெரும்புதுாரில் கவிழ்ந்து விபத்து
ADDED : ஏப் 27, 2025 01:32 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் இருந்து, தாம்பரம் நோக்கி, நேற்று, காலை 10:00 மணி அளவில், கான்கிரீட் கலவை இயந்திர லாரி சென்றுக் கொண்டிருந்தது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, குன்றத்துார் செல்லும் சாலைக்கு செல்லும் போது, ஸ்ரீபெரும்புதுார் கூட்டு சாலை அருகே லாரி கவிழ்ந்து; விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், லாரி இன்ஜினில் இருந்து, புகை மலமலவென பரவியதால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. தகவல் அறிந்த, ஸ்ரீபெரும்புதுார் போக்குவரத்து போலீசார், ராட்சத கிரேன் வாகனத்தின் வாயிலாக கவிழ்ந்து கிடந்த லாரியில் சிக்கிய ஓட்டுனரை மீட்டு, வாகனத்தையும் சரி செய்து அனுப்பி வைத்தனர்.
இதனால், ஸ்ரீபெரும்புதுார் - -ஒரகடம்- - குன்றத்துார் சாலையில் அரை மணி நேரம்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.