/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பறிமுதல் வாகனங்கள் காஞ்சியில் இன்று ஏலம்
/
பறிமுதல் வாகனங்கள் காஞ்சியில் இன்று ஏலம்
ADDED : மார் 31, 2025 11:49 PM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்கீழ், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 11 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் என, 12 வாகனங்கள் அரசுடைமையாக்கப்பட்டு, அரசிற்கு வருவாய் ஈட்டும் வகையில் இன்று, காலை 10:00 மணியளவில், காஞ்சிபுரம் திருவீதிப்பள்ளம் பகுதியில் ஏலம் நடத்தப்பட உள்ளது.
திருவீதிப்பள்ளத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் பொது ஏலம் நடத்தப்பட உள்ளது. வாகனங்கள் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம் அருகே பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பொது ஏலத்தில் பங்கேற்பவர்கள், இருசக்கர வாகனத்திற்கு 2,000 ரூபாயும், நான்குசக்கர வானத்திற்கு 10,000 ரூபாயும் செலுத்தி இன்று ஏலத்தில் பங்கேற்கலாம்
ஏலத்தில் பங்கேற்று, வாகனம் எடுக்காதவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முன் வைப்பு கட்டணத்தொகை ஏலத்தின் முடிவில் திருப்பித் தரப்படும்.