/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களால் ஸ்ரீபெரும்புதுாரில் நெரிசல்
/
சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களால் ஸ்ரீபெரும்புதுாரில் நெரிசல்
சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களால் ஸ்ரீபெரும்புதுாரில் நெரிசல்
சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களால் ஸ்ரீபெரும்புதுாரில் நெரிசல்
ADDED : ஏப் 04, 2025 01:22 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில், காந்தி சாலை, தேரடி சாலை, திருவள்ளூர் பிரதான சாலை, பெங்களூரு பிரதான சாலை உள்ளிட்டவை முக்கிய வழிதடமாக உள்ளது.
இங்கு, ராமானுஜர் கோவில், ஸ்ரீபெரும்புதுார் தாலுக்கா அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம் உட்பட, தனியார் மருத்துவமனை, உணவகம், வங்கி, பூக்கடை, ஹார்டுவேர்ஸ், மளிகை கடை உட்பட 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்றபட்ட கிராமத்தினர் பல்வேறு தேவைக்காக, தினமும் ஸ்ரீபெரும்புதுார் வந்து செல்கின்றனர். இங்குள்ள கடைகளுக்கு வருவோர், தங்கள் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களை, சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர்.
இதனால், சாலை குறுகலாகி நாள்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால்,பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது, சாலையில் செல்லும் வாகனங்கள் எதிர்பாராத விதமாக உரசும் போது வாக்குவாதம் ஏற்படுகிறது.
எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது, போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

