/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாத்தான்குட்டை தெருவில் தார் சாலை அமைக்கும் பணி
/
சாத்தான்குட்டை தெருவில் தார் சாலை அமைக்கும் பணி
ADDED : செப் 24, 2024 11:04 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் இருந்து சர்வதீர்த்த குளம், பஞ்சுபேட்டை, ஒலிமுகமதுபேட்டை, ஏகாம்பரநாதர், சந்தவெளியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர், சாத்தான்குட்டை தெரு வழியாக சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இச்சாலை ஆங்காங்கே சாலை பெயர்ந்து மேடு பள்ளமாக சேதமடைந்த நிலையில் இருந்தது. போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினரும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சாத்தான்குட்டை தெருவிற்கு புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.