/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாவட்ட அரசு மருத்துவமனை 'பார்க்கிங்'கில் கட்டட கழிவுகள்
/
மாவட்ட அரசு மருத்துவமனை 'பார்க்கிங்'கில் கட்டட கழிவுகள்
மாவட்ட அரசு மருத்துவமனை 'பார்க்கிங்'கில் கட்டட கழிவுகள்
மாவட்ட அரசு மருத்துவமனை 'பார்க்கிங்'கில் கட்டட கழிவுகள்
ADDED : ஜன 17, 2025 01:01 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில், அவசர சிகிச்சை, பொது மருத்துவம், குழந்தைப்பேறு, கண், காது, மூக்கு, பல், பால்வினை, காசநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு, பல்வேறு கட்டடங்களில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என, தினமும் 3,000த்திற்கும் மேற்பட்டோர், பல்வேறு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
இதில், இருசக்கர வாகனங்களில் வருவோரின் வாகனங்களை நிறுத்த, மருத்துவமனை வளாகத்தில் போதுமான ‛பார்க்கிங்' வசதி இல்லை.
இதனால், பலர் மருத்துவமனைக்கு வெளியே சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துகின்றனர்.
மருத்துவமனை உட்புறத்தில், ‛பார்க்கிங்' என ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதோடு, சமமற்ற கரடுமுரடான தரையாக இருப்பதால், இருசக்கர வாகனங்களை நிறுத்தினாலும், அவை சாய்ந்து விழுந்து வாகனங்கள் சேதமாகின்றன.
அவசரத்திற்கு வாகனத்தை பார்க்கிங் செய்யவும், எடுக்கவும் முடியாத சூழல் உள்ளது.
எனவே, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இடையூறாக கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளை அகற்றுவதோடு, சமதளமான கான்கிரீட் தரை அமைக்க, மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.