/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
20 சதவீத ஊதிய உயர்வு கோரி கூட்டுறவு ஊழியர்கள் 'ஸ்டிரைக்'
/
20 சதவீத ஊதிய உயர்வு கோரி கூட்டுறவு ஊழியர்கள் 'ஸ்டிரைக்'
20 சதவீத ஊதிய உயர்வு கோரி கூட்டுறவு ஊழியர்கள் 'ஸ்டிரைக்'
20 சதவீத ஊதிய உயர்வு கோரி கூட்டுறவு ஊழியர்கள் 'ஸ்டிரைக்'
ADDED : அக் 07, 2025 01:49 AM

காஞ்சிபுரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், காஞ்சிபுரத்தில் நேற்று வேலை நிறுத்தப்போராட்டத்தை துவக்கினர்.கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகம் அருகே, நுாற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தை துவக்கினர். போராட்டத்திற்கு, ஒருங்கிணைப்பு குழு செயலர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார்.
சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
கூட்டுறவு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி குறைப்பை ரத்து செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு, 20 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும்.
ரேஷன் கடைகளில், புளுடூத் இணைப்பு ஏற்படுத்தி, எடை போடும் பணியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட, 25 கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வருகிறோம். கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.