/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் கம்பி அறுந்து விழுந்து பசு மாடு பலி
/
மின் கம்பி அறுந்து விழுந்து பசு மாடு பலி
ADDED : ஆக 18, 2025 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை:படப்பை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், நேற்று இரவில் காற்றுடன் கன மழை பெய்தது. அப்போது, ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில், மின் கம்பி அறுந்து கீழே விழுந்தது.
புகார் தெரிவித்தும், மின் வாரிய ஊழியர்கள் வருவதற்கு தாமதமானதால், கண்ணன் என்பவருக்கு சொந்தமான பசு மாடு, அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து, மின்சாரம் பாய்ந்து பலியானது. இதையடுத்து, படப்பை மின் வாரிய ஊழியர்கள், அறுந்து விழுந்த மின் கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.