/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரத்தில் கொட்டப்படும் மாட்டு சாணத்தால் விபத்து அபாயம்
/
சாலையோரத்தில் கொட்டப்படும் மாட்டு சாணத்தால் விபத்து அபாயம்
சாலையோரத்தில் கொட்டப்படும் மாட்டு சாணத்தால் விபத்து அபாயம்
சாலையோரத்தில் கொட்டப்படும் மாட்டு சாணத்தால் விபத்து அபாயம்
ADDED : செப் 22, 2025 12:50 AM

ஸ்ரீபெரும்புதுார்:செரப்பனஞ்சேரி அடுத்த நாவலுாரில், சாலையோரம் கொட்டப்படும் மாட்டு சாணத்தால் துர்நாற்றம் வீசுவதுடன், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், படப்பை அடுத்த, ஆரம்பாக்கம் சந்திப்பில் இருந்து, ஆரம்பாக்கம் பிரதான சாலை பிரிந்து செல்கிறது.
சுற்றுவட்டார கிராமத்தினர், இந்த சாலை வழியே படப்பை, தாம்பரம் பகுதிகளுக்கு தினமும் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், நாவலுார் பகுதியில் மாடுகளை வளர்ப்போர், சாலையோரத்தில் ஆங்காங்கே மாட்டு சாண கழிவுகளை கொட்டி வருகின்றனர்.
இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரம் கொட்டப்படும் மாட்டு சாணத்தால், விபத்தில் சிக்கும் நிலை உருவாகி உள்ளது.
தவிர, மாட்டு சாண கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக செல்வோர் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, சாலையோரங்களில் மாட்டு சாணம் கொட்டுவதை தடுக்க, உள்ளாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.