/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிணற்றில் விழுந்த பசு பத்திரமாக மீட்பு
/
கிணற்றில் விழுந்த பசு பத்திரமாக மீட்பு
ADDED : ஜன 19, 2025 02:55 AM

களக்காட்டூர், காஞ்சிபுரம் அடுத்த வேடல் கிராமத்தில், பயன்பாடின்றி பாழடைந்த 40 அடி ஆழமுள்ள விவசாய கிணறு, தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. நேற்று காலை 6:30 மணிக்கு, அப்பகுதியில் மேய்ச்சலுக்காக சென்ற கார்த்திக் என்பவரின் பசு, பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
இதுகுறித்து காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் சங்கர் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், வேடல் கிராமத்திற்கு சென்றனர்.
தண்ணீர் இல்லாமல் பாழடைந்த கிணற்றுக்குள் மரக்குச்சிகளின் மீது விழுந்து கிடந்த பசுவை தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி,எந்தவித காயமும் இன்றி கயிறு வாயிலாகஉயிருடன் மீட்டனர்.