ADDED : நவ 10, 2026 06:35 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான, மத்திய-, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மா. கம்யூ., கட்சி சார்பில், இன்று (நவ.,10) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே, குருவிமலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் கிளைச் செயலர் வேலு தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் சிவப்பிரகாசம் வரவேற்றார்.
இதில் வட்டச் செயலர் பழனி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சங்கர் ஆகியோர் பங்கேற்று, விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சந்திக்கும் சிரமங்களை சுட்டிக்காட்டி உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தத் தவறிய, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
