ADDED : ஜன 23, 2025 07:24 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 73 கிராமங்களில் உள்ள விவசாயிகள், தற்போது 21,000 ஏக்கர் பரப்பளவில், நவரை பருவ நெற்பயிர் நடவு செய்துள்ளனர். ஒவ்வொரு பருவமும் நடவு செய்யப்படும் பயிருக்கு காப்பீடு செய்ய, வேளாண் துறையினர் வழிகாட்டி வருகின்றனர்.
இதை பயன்படுத்தி காப்பீடு செய்யும் விவசாயிகள், பயிர் சேதம் ஏற்படும்போது, அரசின் நிவாரண உதவியை பெற்று வருகின்றனர். அதன்படி, தற்போது நடவு செய்துள்ள நவரை பருவத்திற்கு, ஜன., 31-க்குள் விரைந்து காப்பீடு செய்ய, உத்திரமேரூர் வேளாண் உதவி இயக்குநர் முத்துலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள், பொது சேவை மையங்களில் பதிவு செய்து, அதில் பயிர் செய்துள்ள கிராமத்தின் பெயர், பயிரிடப்பட்டுள்ள பயிரின் பெயர் ஆகியவை சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
பதிவு செய்ததில் ஏதேனும் பிழை இருந்தால், சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விண்ணப்பதை நிராகரிக்க வேண்டும். பின், சரியாக பதிவு செய்து வரும் வரும் 31க்குள் காப்பீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.