
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த, ஒழுக்கோல்பட்டு கிராமத்தில் இருந்து, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம் கீழ்வேண்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.
இந்த சாலை குறுக்கே, மக்ளின் கால்வாய் தரைப்பாலம் செல்கிறது. இந்த பாலத்தின் அருகே, மின் மாற்றிக்கு செல்லும் மின் கம்பங்கள் உள்ளன. இந்த மின் கம்பங்களின் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது.
வட கிழக்கு பருவ மழை துவக்கத்திற்கு முன், சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில், பருவ மழைக்கு மின் கம்பங்கள் சாய்ந்து மின் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, கீழ்வேண்பாக்கம் கிராமத்தில் சேதமடைந்து இருக்கும் மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.