/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாயக்கன்பேட்டை குளத்தின் தடுப்பு சுவர் சேதம்
/
நாயக்கன்பேட்டை குளத்தின் தடுப்பு சுவர் சேதம்
ADDED : ஜன 13, 2025 12:44 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த, நாயக்கன்பேட்டை கிராமத்தில், வேகவதி ஆற்றங்கரையோரம் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ், பொது குளம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குளத்தை சுற்றிலும், கற்கள் பதிக்கப்பட்டு, தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த கட்டமைப்பால், அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு ஆழ்துளை கிணறுகளில், நிலத்தடி நீர் மட்டம் உயருவதற்கு, பேருதவியாக இருந்தது.
'பெஞ்சல்' புயலால், வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, நாயக்கன்பேட்டை பொது குளத்தின் தடுப்பு சுவர் ஒரு புறம் அரிப்பு ஏற்பட்டு கான்கிரீட் பெயர்ந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி துறையினர் ஆய்வு செய்து, குளத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.